அனர்த்த மூலவள நிலையம் செயலாளர்‚ அனர்த்த நிவாரண சேவைகள் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம் மூலம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கணேஷ் அவர்களின் சிபார்சின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தில் அனர்த்த மூலவள நிலையம் 2006ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் நிலையத்தின் செயற்பாடுகளாவன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குதல். அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல். அனர்த்தத்திற்கு உதவி செய்யும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டு அவர்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல் போன்றவையாகும்.
இவ் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு யாழ் மாவட்டத்தில் வெள்ளம்‚ வரட்சி‚ சூறாவளி போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு‚ இவற்றுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடம் வரட்சி நிவாரணத்திற்கு 3 மில்லியன் ரூபாவும்‚ சூறாவளி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பிற்கு 15‚000.00 ரூபாவும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்திட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரச‚ அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கான அனர்த்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று 24.07.2007ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அனர்த்தத்தின் போது தொடர்புகொள்ளவேண்டிய முக்கியமான தொலைபேசி இலக்கங்கள்: