பூகோள மற்றும் நிருவாக தகவல்கள்
விடயம்
| இலங்கை
| மத்திய மாகாணம்
| நுவரெலியா மாவட்டம்
| அலகு
| மொத்த நிலப்பகுதி
| 65610
| 5674
| 1741
| கி.மீ .வர்
| நிலப்பகுதி (உள்ளக நீர் நிலைகள் தவிர்ந்த)
| 62705
| 5575
| 1721
| கி.மீ .வர்
| உள்ளக நீர் நிலைகள்
| 2905
| 99
| 35
| கி.மீ .வர்
| பிரதேச செயலாளர் பிரிவுகள்
| 312
| 35
| 05
| அலகு
| கிராம அலுவலர் பிரிவுகள்
| 14012
| 2224
| 491
| அலகு
| கிராமங்கள்
| 38213
| 5781
| 1132
| அலகு
| மாநகர சபைகள்
| 17
| 03
| 01
| அலகு
| நகர சபைகள்
| 38
| 06
| 02
| அலகு
| பிரதேச சபைகள்
| 257
| 33
| 05
| அலகு
|
பூ கோள அமைப்பு
இலங்கையின் மத்திய மாகாணத்திற்குரிய நுவரெலியா மாவட்டமானது கண்டி,பதுளை,இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்ட பரந்த பூகோள மற்றும் காலநிலை இலட்சணங்களைக் கொண்ட 554 மைல்கள் வர்க்க பரப்பளவிலான (1437 கி.மீ வர்க்க பரப்பளவு) பிரதேசத்தில் பரந்துள்ளது.
வருடாந்த மழை வீழ்ச்சி மூன்று வழிகளில் கிடைக்கப் பெறுகின்றன.
தென்மேல் பருவப்பெயர்ச்சி
வடகீழ் பருவப்பெயர்ச்சி
இடைப் பருவப்பெயர்ச்சி
வடகீழ் பருவப்பெயர்ச்சி மூலம் மாவட்டம் முழுவதற்கும் பெருமளவு மழை கிடைக்கப்பெறுகின்றது. தீவின் அனைத்து காலநிலைகளும் இம்மாவட்டத்தில் நிலவுகின்றன.
பிரதேசத்தின் சூழல் முக்கியத்துவம்.

கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் அமைந்துள்ள நுவரெலியா நகரமானது 8250 அடி உயரமான பீதுருதாலகலை மலையினாலும் 7342 அடி உயரமான கிகிலியாமான மலையினாலும் சூழப்பட்ட பீட பூமிக்குரிய 4.88 மைல்கள் வர்க்க பரப்பளவிலான பிரதேசத்தில் பரந்துள்ளது. இதன் கேந்திர அமைப்பு சூழல், பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மத்திய மாகாணத்தின் மிகவும் உயரத்தில் அமைந்துள்ள மலைகள் இரண்டினாலும் நீர் சேரும் பீட பூமியான இப்பிதேசம் மகாவலி கங்கையின் பிரதான நீர் ஊற்றாகவுள்ள கொத்மலை ஓயாவினாலும் நகர மத்தியில் பாயும் நானுஓய நீர் ஓட்டத்தினாலும் வளமூட்டப்படுவதாலும் உமா ஓய என்னும் பிரதான நீர் ஊற்று நகர மத்தியில் அமைந்திருப்பதாலும் இப்பிரதேசம் நீர் வளமுள்ள வலயமொனறாக முக்கியத்துவம் பெறுகின்றது.
நகரைச் சூழவுள்ள மலைகளிலிருந்து பாயும் கிளேன் நீர் அருவியும் லவர்ஸ்லிப் நீர் அருவியும் நகரிற்கு அழகு சேர்க்கும் அருவிகளாக அமையும் அதேவேளை கிரேகரி வாவியின் நிர்மாணிப்பும் சுந்தரமான பெறுமதியான தாவரங்களைக்கொண்ட விக்டோரியா பூங்காவும் சுற்றாடல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கு மேலதிகமாக நுவரெலியா நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள கல்வேஸ் அபய பூமியானது தீவிலேயே நகர மத்தியில் அமைந்துள்ள ஓரே ஓரு அபய பூமியாகவிருப்பது விசேட தன்மையாகும்.

|